அமரர் நந்தகுமார் கதிர்செல்வன்
(ஈசன்)
பிறப்பு : 13 நவம்பர் 1976 — இறப்பு : 18 யூலை 2011

புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த நந்தகுமார் கதிர்செல்வன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், நந்தகுமார் மீனலோசனி தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

அன்பை ஈந்து அறிவைப் பகிர்ந்து
பண்பைக் காட்டி பாரினில் நன் நெறியில்
நாம் வாழ நல்வழி காட்டி!

அணையாத தீபமாய்!
இறைவன் திருவடியில் சரணடைந்து
எம்மை எல்லாம் ஆறாத்துயரில்
அகாலமாய் அலறவிட்டு சென்ற அன்பு ஈசனே!

மலையெனவே நீயிருந்தாய்!
பலமெனவே நாமிருந்தோம்!
நிலமாகிப் போனதுவோ
நிலை குலைந்து போனோமே

எங்கள் உறவே!
பாசத்தை நீ விதைத்தாய்
பேசாமல் விரைந்து போவதற்கா?

சிரிப்பினிலே நீ சின்னவனாய்!
பொறுப்பினிலே நீ மன்னவனாய்!
மனைவி பிள்ளைகளுடன் அன்பை காட்டினாய்

உன்னை பார்க்க முடியாது
என்று எண்ணும் போது
இதயமே வெடிக்குது மகனே!
நீ எங்கும் போகவில்லையடா
எங்கள் கண் மறைந்து நிற்கின்றாய்!

உன் நிழலும் நினைவும்
எங்களுடனே வாழும் மகனே!

கண்மணியே ஈசா எம்
கண்ணீர் பூக்களின் நினைவஞ்சலி!

தகவல்
தாய், தந்தை, சகோதரிகள்
Loading..
Share/Save/Bookmark