அமரர் ஆரணி ஆறுமுகதாசன்
(Mathematics & Finance in Manchester University)
அன்னை மடியில் : 8 செப்ரெம்பர் 1993 — ஆண்டவன் அடியில் : 1 ஓகஸ்ட் 2014
திதி : 22 யூலை 2015


டென்மார்க் Herning ஐப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆரணி ஆறுமுகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு உருண்டோடி சென்றதம்மா!
உந்தன் கொஞ்சும் மழலை மொழி
காதுவழி கேட்க இதயம் ஏங்கி தவிக்குதம்மா!
அழுதழுது தேடுதம்மா எம் விழிகள் உனைக் காண

மண்ணில் மதிப்போடு மலர்ந்திட்ட பொன்மகளே!
நீ விண்ணில் கலந்திட்ட நாள் முதலாய்
நம் விழிகள் உறங்கிட மறுக்குதம்மா

வாழ்க்கைப் பயணத்தில் சிறப்புடன் இருந்த உன்னை
வழிப் பயணத்தில் காலனவன் பறித்தது ஏன்?
சிற்பம்போல் உருவாகி சித்திரமாய் வளர்ந்த செல்வம் நீ!
அற்ப ஆயுளுக்குள் அணைந்த தீபம் ஆனாயே!

பூவிலும் மென்மையான உன் அழகு திருமுகத்தை
தினம் பார்க்க தவிக்கின்றோம்!
எல்லா உறவுகளையும் ஏங்கி தவிக்கவிட்டு
எங்கேயம்மா நீ சென்றாய்?

கொஞ்சி பேசியதும் சிரித்து விளையாடியதும்
நீங்காத நினைவுகளாய் நெஞ்சினிலே வலிக்குதம்மா!
நம் வீட்டு முற்றத்தில் தினம் தினமும் சிரிப்பொலிதான்
யார் கண் பட்டதுவோ தினமும் அழுகின்றோம்

பண்பிலும் படிப்பிலும் அன்பிலும் முதலிடத்தில்
நிற்பதையே விரும்பிக் கொள்வாயே!
எங்களை விட்டுப் பிரிவதிலும் முதலிடமாய் போனாயே!

பல்கலைக்கழகம் சென்று பலநாடு காட்டுவேன்
என பொன்மொழி உதிர்த்த எம் ஆரணியே
ஒரு நொடிப் பொழுதினிலே
நீ மாயமாய் மறைந்ததேனோ?

முத்தம் தந்து விடை பெற்றாயே
என் முத்து மகளே மீண்டும் வருவாயா?
இறைவா உன் கரம்தனிலே
காத்திடுவாய் எம் மகளை!

நித்தம் கலங்கி நிற்கும் எங்களுக்கு
ஆறுதல் அளித்திடுவாய் பெருமானே!

உன் பிரிவால் வாடித்துடிக்கும் அப்பா, அம்மா,
சகோதரிகள், உற்றார், உறவினர், நண்பர்கள்

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — பிரித்தானியா
தொலைபேசி:+442085511455
செல்லிடப்பேசி:+447448489550
- — டென்மார்க்
தொலைபேசி:+4526356292
Loading..
Share/Save/Bookmark