பிறப்பு  இறப்பு
5 பெப்ரவரி 1933  30 யூன் 2011
அமரர் வேலுப்பிள்ளை பூபாலசிங்கம்
(காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன முன்னாள் உத்தியோகத்தர்)
பிறப்பு  இறப்பு
4 யூன் 1935  16 ஓகஸ்ட் 2010
அமரர் பூபாலசிங்கம் பாக்கியம்

 திதி:06-07-2013 

மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், சங்கானை பழைய தபால்கந்தோர் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை பூபாலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்ணில் அழுகை ஓயவில்லை
நெஞ்சம் உன்னை மறக்கவில்லை
நேசம் என்றும் நிலைத்திருக்க
பாசத்தை தந்து சென்ற தந்தையே!
அம்மா இல்லை என்றதும்
இப் பூவுலகில் வாழ விருப்பமில்லாமல்
சொர்க்கம் தேடி சென்றாயோ?
நீ நின்றதும் நடந்ததும்
பரிவோடு எமை வளர்த்ததும்
அத்தனையும் காற்றாகிப் போனதுவோ?
நீங்கள் வாழ்ந்த மண்ணிலே
நீங்காத பெருமை தேடி பிள்ளைகள் எம்மையும்
நல்வழி காட்டியே நானிலம் போற்றும் பண்பில்
உருவாக்கிய தெய்வங்களின் ஆன்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.


திதி:14-08-2013 

மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், சங்கானை பழைய தபால்கந்தோர் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூபாலசிங்கம் பாக்கியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆலமரமாய் விழுதுகளாய் எமைத்தாங்கி
அனைத்திலும் நாம் வளர ஏணியாகி
அன்பினிலே எமக்கொரு ஆலயமாகிய
அன்பு அம்மாவே!
கொடிய நோய் வடிவில் காலன்
கொன்றுவிட்டானே உமை
அன்று மாலைவரை நீ புரிந்த அன்பு மழை
இன்னும் எம் கண்முன்னே வந்து செல்லுதம்ம
நாடு கடந்து வந்து நாமுமைக் கண்டு
நாளும் பொழுதும் மகிழ்ந்தருந்த கணங்களும்
பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் நீ
கொஞ்சிக் குலாவிய தருணங்களும்
என்றும் உம்மை நினைவூட்டுதம்மா!
உம் சிரித்த முகத்தினையும்
உம் சீரிய அன்பினையும்
இனி என்று காண்போம் நாம்.
ஜென்மங்கள் கழிந்தாலும்
எம் சந்ததி இருக்கும் வரை
தொடர்ந்திடும் உம் நினைவு.

ஓம் சாந்தி...! ஓம் சாந்தி....! ஓம் சாந்தி....!!!

 

 

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அன்பு(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+491782370148
Loading..
Share/Save/Bookmark