அமரர் சின்னதம்பி நாகராசா(விஞ்ஞானி)
மலர்வு : 26 மார்ச் 1945 — உதிர்வு : 28 ஏப்ரல் 1973

இல 44/2, யாழ். மணிக்கூட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சின்னதம்பி நாகராசா அவர்களின் 40 வது ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஓடலாம், தசாப்தங்கள் தாண்டலாம்,
நூறாண்டும் கழியலாம்,
ஆனால் உன் அழியாத நினைவுகள்
பசுமரத்தாணியாய் என்றும்
எம் நெஞ்சிலே.

உன் இளமையது மறையவில்லை
இல்லறம் நீ காணவில்லை உன்
சாதனைகள் உறங்கிவிட்ட சித்திரங்களாய்…..

வஞ்சகன் காலன் அவன்
அள்ளிச் சென்றான் ஈரமின்றி
அவன் பின்னே சென்றுவிட்டாய்
எமையெல்லாம் தவிக்கவிட்டு

எம் குலத்தின் விருட்சமதாய்
புகழ் பெற்றாய் மேதினியில் உன்
நாமம் முன்னாலே பேர் பெற்றாய்
விஞ்ஞானியாய்...

உன் நினைவாய்
பஸ்தரிப்பு கண் எதிரில் காட்சி தர
நெஞ்சமதில் உன் நினைவு
மறையாத காவியமாய் எம்
நெஞ்சில் வாழ்கின்ற தெய்வமகன்
நீயன்றோ...

உந்தனது சாதனைகள்
மூர்ச்சையற்றுக் கிடக்குதையா
மீண்டும் இத்தரணியதில் உன் நாமம் புகழ் பூக்க
புதியதொரு விஞ்ஞானியாய் எம்
குலத்தில் பிறப்பாயா...

நித்தியமாய் நித்திரையில்
நீ உறங்கி
நின்மதியாய் உன் ஆன்மா சாந்தி பெற்று
நித்தமும் இறைவனுடன் இணைந்திருக்க
கண்ணீரைக்
காணிக்கையாக்குகின்றோம்
.

தகவல்
S.ஞானசேகரம்(Baba) சகோதரன்
தொடர்புகளுக்கு
S.ஞானசேகரம்(Baba) சகோதரன் — டென்மார்க்
தொலைபேசி:+4597850639
செல்லிடப்பேசி:+4521962097
Loading..
Share/Save/Bookmark