அமரர் செல்வி ரேணுகா பிள்ளைநாயகம்
கண்மகிழ : 1 மார்ச் 1980 — கண்நெகிழ : 14 மார்ச் 2011

யாழ்.புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரேணுகா பிள்ளைநாயகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி,

அருகில் நீ இல்லை யென்றாகில்
எம்மோடு நீ இல்லை யென்றாகிடுமோ
விண்ணோடு நீ உறைந்திட்டாலும் - உன்
வண்ண முகம் மண்ணோடு மறைந்திடுமா
    கண்ணே மணியே ரேணு…… உனை
காணத் துடித்து
கலங்கித்தான் போனோமம்மா – உன்
நினைவோடும் நாம் அழுது
ஈராண்டும் ஆனதம்மா…….
ஏனம்மா…. இமை மூடி நீ சென்றாய்.!

ரேணு….!இன்றுனக்கு அகவை தினம்
அப்பா அம்மா அன்ரி அக்கா அத்தான்
அண்ணா, அண்ணி என ஏனம்மா விழிக்கவில்லை
சின்னண்ணாவும், குட்டியாண்ணாவும், தம்பியும்
ஏன் எனக்கு வாழ்த்துரைக்க வில்லையென்று.!

நீ இன்னும் எழவில்லை………
லஜிக்குட்டி அச்சுசெல்லம் என ஏன் தூக்கி
கொஞ்சவில்லை………..
கனியாக வந்தது நீதானாம்….
வருவோரெல்லாம் வாக்குரைக்கின்றனர்..!
ஆனாலும் எம் நெஞ்சம் ஆறுதில்லையே
ரேணுவம்மா அகலாத நினைவுடனே
தொழுகின்றோம் உனையம்மா
.

வீட்டு முகவரி
ரேணு இல்லம்
பிரம்படி கொக்குவில்
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark