அமரர் மனுவற்பிள்ளை செல்வராஜா
(பீற்றர்)
மலர்வு : 10 டிசெம்பர் 1947 — உதிர்வு : 21 சனவரி 2011

குடத்தனை பொற்பதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மனுவிற்பிள்ளை செல்வராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

வருடங்கள் இரண்டானாலும்- ஆறாது
உங்கள் பிரிவின் துயரம்
தீராது-எங்கள் சோகம்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இதயம் வரைக்கும் இறங்கிய சோகத்தால்
இன்றும் எங்கள்- விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்

எங்கள் உயிராக வாழ்ந்து - எம்
உணர்வோடு கலந்த அப்பாவே
நீங்கள் இல்லையென்பது- இன்னமும் தான்
ஏற்க மறுக்கிறது எம்மிதயம்- ஏனெனில்
நீங்கள் எம் உள்ளங்களில் வாழ்கின்றீர்கள்

எமக்கு ஆறுதலே நீங்கள்
தானே அப்பா
ஆறுதல் எமக்கேது - ஆறுதலை
தந்திடவே திரும்பி நீங்கள் வந்திட்டய்யா
கண்களில் நீருமில்லை - காத்திருக்க
பொறுமையுமில்லை உங்கள் நினைவு
மட்டும் மாறவில்லை மாறவில்லை

வற்றாத உங்கள் நினைவுடன் மனம் உருகி கலங்கி நிற்கின்றோம்
உங்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்
என்றும் உங்கள் பிரிவால் துயருற்று வாடும்
மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
உற்றார், உறவினர்கள்

அன்னாரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி 21.01.2013 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் பொற்பதி குடத்தனை புனித இராயப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி நடைபெற்று அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்தில் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அத்தோடு 27.01.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று 16:00 மணியளவில் HOLLAND, SCHAGEN என்னும் இடத்தில் இரங்கல் திருப்பலி நடைபெறும். இவ் இரங்கல் திருப்பலியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வராஜா தவமணி(மனைவி) — இலங்கை
தொலைபேசி:+94213207774
டே.லெற்றுசியா — இலங்கை
தொலைபேசி:+94213212580
செ.அமலதாஸ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41622960664
செ.டயஸ் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41415354290
செ.மரினா — பிரான்ஸ்
தொலைபேசி:+33148610676
செ.பிறின்சன் — நெதர்லாந்து
தொலைபேசி:+31224290270
செ.பமிலா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33951028414
செ.றேகன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33148610676
செ.ஸ்ரெலா — பிரான்ஸ்
தொலைபேசி:+33148610676
Loading..
Share/Save/Bookmark