அமரர் நித்தியானந்தன் மயூறா
(மயு)
அன்னை மடியில் : 7 ஓகஸ்ட் 1987 — ஆண்டவன் அடியில் : 21 சனவரி 2007

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மணியாவத்தையை வசிப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த நித்தியானந்தன் மயூறா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்வலி.

நாங்கள் தேடும் தேடலின் பொக்கிஷம் - மயு
உன் பாத சுவடுகளின் வழியே
உன்னை தேடுகின்றோம் - மயு
ஆறாத் துயரில் (நீ) எங்களை ஆழ்த்திவிட்டு
சென்று ஈர்மூன்று ஆண்டுகள் ஆனதம்மா!!
உன் புன்னகையில் நாங்கள் மகிழ்ந்த -  காலம்
கனவாகி போய்விட்டதம்மா!
கண்ணுக்குள் மலர்ந்து இருக்கும் - உன்
நினைவுகளை மீட்டு பார்க்க முடியுதம்மா - மயு
ஒரு செடியில் பூத்து இருந்த மலர்களின் - ஒரு
மலறை இறைவன் ஏனோ தனக்கு பிடிக்குமே.
என்று கொய்து விட்டானோ..
இறைவன் எங்கள் மயுறா என்ற மலரை மறுபடியும்
எம் குடும்ப தோட்டத்தில் மலரசெய்வீரா!
ஆறு ஆண்டுகள் அல்ல - ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
உன் நினைவுகளுடன் உன் வரவுக்காய் காத்திருப்போம்

உன் வரவை எதிர்பார்க்கும்
அப்பா, அம்மா, அக்கா, தங்கை, அத்தான்

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark