அமரர் கிறிஸ்ரியன் கெனடி அருளானந்தம்
தோற்றம் : 13 யூன் 1968 — மறைவு : 1 சனவரி 2009

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரியன் கெனடி அருளானந்தம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

உங்களிற்கு என்று இவ்வுலகில்
எதையுமே செய்ததில்லை
ஒவ்வொரு நொடிப் பொழுதும்
எமக்காக வாழ்ந்தவனே.
இறைவன் கொடுத்த வரம்
என பொருமையோடு வாழ்ந்தேனே...

வரமாக தந்துவிட்டு
பாதியிலே பறித்ததேனோ?
ஆண்டு நான்கை கடந்த போதும்
ஆறவில்லை எம் துயரம்...

என் உயிராக வழ்ந்து
உணர்வோடு கலந்தவனே.
உறவுகள் பல இருந்தும்
நீ இல்லாத உலகம்
இது நடுக்காட்டில் நிற்பது போல்
தனிமை தோன்றுதையா...!!!

என்றும் உங்களை பிரியாது வாழும் உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்.

தகவல்
மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்