அமரர் றாஜினி திருக்குமரன்
(R . K . City Building Service Inc. ஸ்தாபனத்தின் உரிமையாளர்)
அன்னை மடியில் : 21 சனவரி 1975 — இறைவன் அடியில் : 30 நவம்பர் 2012

யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட றாஜினி திருக்குமரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

எல்லோருக்கும் இனியவராய்
நல்லுள்ளம் கொண்டவராய்
தன் கணவர் சொல் தளம்பாமல்
புன்னகைத்து பூரித்து நேசமிகு பாசத்துடன்
அல்லலிலும் சினமறியாது அமைதியான உள்ளத்துடன்
இல் வாழ்வில் இறுதிவரை தன்னவர்க்கும் மற்றவர்க்கும்
தன் சேவையாற்றி வந்த திவ்விய மலர் வதனம்
தேயவற்ற வெண்மதி போல் எந்நாளும் காட்சிதர
இதயங்கள் விட்டகலா எம் குடும்ப குலவிளக்கே!

நாட்கள் 31 என்ன பல்லாண்டு சென்றிடினும்
உங்கள் நினைவு எங்கள் நெஞ்சகலாது
நின்று நிலைத்து வாழ்ந்திருக்கும்.

துயர் துடைக்க நீண்ட கரங்களுக்கு...
அன்னாரை இழந்து ஆறாத்துயரில் ஆழ்ந்திருந்த எமக்கு நாலா திசைகளில் இருந்தும் துயர் துடைக்கவென ஆயிரமாய் நீண்டன உங்கள் கரங்கள். நம்மை முழுமையாய் ஆட்படுத்திய தீராதுயரில் இருந்து நாம் சிறிதேனும் மீண்டுவர உங்கள் அருகாமையும், ஆறுதலுமே பெரிதும் உதவின, உங்கள் ஒவ்வொருவரினதும் கரம் பற்றி கண்ணில் ஒற்றி நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். கூடவே வந்திருந்து வேதனையை நீவி விட்டோருக்கும், அவ்வப்போது ஆறுதலாய் வந்து போனோர்க்கும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும், அஞ்சல் அட்டை மூலம் தங்கள் வருத்தத்தை தெரிவித்தோர்க்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு ஆறுதல் தந்தோருக்கும், தூர தேசங்களில் இருந்தும், தாயகத்தில் இருந்தும் தொலைபேசியில் சிரமம் பாராது ஆறுதல் வார்த்தை உதிர்த்தோருக்கும், இதற்கும் மேலாக நாம் அழுதழுது குரல் வற்றி வாடிய போதெல்லாம் குடல் வற்றி போகாது அமுதூட்டி விட்டோருக்கும், மற்றும் பல்வேறு வகைகளிலும் பல்வேறாக எமக்கு உதவிய அனைவர்க்கும் எமதுள்ளம் நெகிழும் நன்றிகள்......

05-01-2013 சனிக்கிழமை அன்று நண்பகல் 11:30மணிதொடக்கம் 2:00 மணிவரை 1148 Bellamy Road, Scarborough, Ont. என்னும் முகவரியில் உள்ள  பெரிய சிவன் ஆலயத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற இருக்கும் பிரார்த்தனையிலும் மதிய போசன விருந்திலும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்க வேண்டி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்
திருக்குமரன்(குமரன் - கணவன்)
தொடர்புகளுக்கு
திருக்குமரன்(குமரன்) — கனடா
செல்லிடப்பேசி:+14168871223
கஜன்(மைத்துனன்) — கனடா
செல்லிடப்பேசி:+14168970606
கருணா(மாமி) — கனடா
தொலைபேசி:+16477850109
மது — கனடா
செல்லிடப்பேசி:+14168546260
அமுது — கனடா
செல்லிடப்பேசி:+16477742204
விது — கனடா
செல்லிடப்பேசி:+14168203735
துர்க்கா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41525367942
வசந்தி — இலங்கை
செல்லிடப்பேசி:+94715762209
நந்தா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447427685256
சிறி — பிரித்தானியா
தொலைபேசி:+441293220587