அமரர் ரஜிஹர் மனோகரன்
அன்னை மடியில் : 22 செப்ரெம்பர் 1985 — ஆண்டவன் அடியில் : 2 சனவரி 2006

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரஜிஹர் மனோகரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

02-01-2006 திருகோணமலைக் கடற்கரை காந்தி சிலையடியில்
பரிதாபமாகக் கொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஓருவர்!

எம் உயிரினும் இனிய ரஜிக்கண்ணா,
இறைவன் தந்த அற்புதத் தெய்வமே,
உலகோர் அறிந்த உன்னதக் குழந்தாய்,
சத்தியம் தேர்ந்தெடுத்த உத்தமப் பிறப்பே...!

அன்பை அறிவரோ,கருணையை உணர்வரோ,
இறைகுணம் கொண்ட உயிர்களை அறிவரோ,
பாசந்தெரியாப் பாதகப் பேய்கள் - உங்களைக்
கொடுங்கோலாட்சியில் கொடூரமாய்ச் சாய்த்தனர்...!

ஏழு வருடங்கள் எம்மருகிலில்லை எனினும் எங்கள்
உணர்விலும் நினைவிலும் கனவிலும் சுமப்போம்,
இனியும் எம்மிடம் பிரிப்பரோ உங்களை! இந்த
இழிநிலைக் கேடருக்கு இறைவன் தீர்ப்பு நிச்சயம்...!

எம்மோடு நீங்கள் இருப்பதாய் பளிச்சென்று சிரிப்பதாய்
நிறைவற்ற எம்உள்ளம் எண்ணியெண்ணி மாய்கிறது.
கண்ணா உம்பொன்னுடலை, மாசற்ற வதனத்தை,
அன்பொழுகப் பேசிய வார்த்தைகளை இறப்பினும் மறவோம்...!

எம்முடன் வாழ்ந்த இருபது வருடங்கள்
எமக்காய் பிறர்க்காய் ஆற்றிய உதவிகள்
மறவோம் மறவோம் நன்றி மறவோம்
கண்ணீர்மல்கினும் மனமுருகப் பிரார்த்திக்கிறோம்...!

உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்...!!!
ஓம் சாந்தி...! சாந்தி...! சாந்தி...!

என்றும் உங்கள் அன்புக் குடும்பத்தினரும், உறவினரும், நண்பர்களும்.

தகவல்
குடும்பத்தினர்.