அமரர் இராமநாதன் சிவசோதி
மலர்வு : 22 மே 1960 — உதிர்வு : 17 ஏப்ரல் 2011

குப்பிளானைப் பிறப்பிடமாகவும் சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமநாதன் சிவசோதி அவர்களின் ஓராண்டு நினைவு அஞ்சலி.

எம் தாய் வயிற்றில் பூத்த பல பூக்களில்
நீ ஒரு பூ எம் உடன் பிறப்பு
எம் உயிர்த்துடிப்பு
நாம் கேட்காமல் கிடைத்த வரம் நீ
மூன்றெழுத்தில் ஒரு கவிதை கேட்டால்
முதலில் சொல்வோம் அண்ணா என்று
சோகங்கள் பல நூறெமக்கு - இருப்பினும்
தினந்தோறும் சிரித்தெழுவோம்
உன்பூமுகம் பார்த்து.

எம் கண்ணீரால் உரம்பெறும்
உன் நினைவுகள்
காலத்தால் கரைந்திடுமோ -நீ
எம் வாழ்வின் வழிகாட்டி
நாம் வாடும் போதெல்லாம்
நீர் ஊற்றியவன்
பாசம் ஒன்றைத் தவிர
வேறென்ன தந்தோம் அண்ணா
கொடிய நோய் வடிவில்
காலன் வந்தபோதும்
கதறியழுதோம் அண்ணா.

எம் தாய்க்கு தாயான உயிரே
எம் பாசம் சொல்ல வார்த்தை இல்லை
எம் சோகம் சொல்லவும் வார்த்தை இல்லை
எங்கனம் எம் அண்ணிக்கும்
உங்கள் செல்வங்களுக்கும்
ஆறுதல் சொல்வோம்.

உன் சிரிப்பு
உன் மென்மையான வார்த்தைகள்
என்றென்றும் எம் இதயங்களில் நிலைநிற்பீர்.

தகவல்
சதோதர சகோதரிகள், குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மோகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41794226066
- — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41319718464
AGS Kiosk — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41432438405