திருமதி பவளம் முத்தையா
(இளைப்பாறிய விவசாய ஆசிரியை)
மலர்வு : 25 ஏப்ரல் 1927 — உதிர்வு : 10 யூன் 2018

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மட்டுவில் தெற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பவளம் முத்தையா அவர்கள் 10-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி இராமசாமி தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற முத்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

மேனகா(கொழும்பு), மனோஜா(சுவிஸ்), மஞ்சுளா(லண்டன்), ஸ்ரீகரன்(லண்டன்), மனோகரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுப்ரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

மகேந்திரன்(சுவிஸ்), சிவசற்குணநாதன்(லண்டன்), பிரியா(லண்டன்), ஸ்ரீகரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பூபாலசிங்கம், காலஞ்சென்ற பவனம், செல்வநாதன், செல்வரத்தினம்(தேவி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஜந்(சுவிஸ்), தீபிகா(லண்டன்), விக்னன்(லண்டன்), ஷாம்பவி(லண்டன்), சாயிரா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 14-06-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் கல்கிசை மயானத்தில்  தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஸ்ரீ(மகன்)
தொடர்புகளுக்கு
மனோஜா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41315301840
மஞ்சுளா — பிரித்தானியா
தொலைபேசி:+441206767636
ஸ்ரீகரன் — பிரித்தானியா
தொலைபேசி:+441206751810
செல்லிடப்பேசி:+447970027817
மனோகரி — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61394379619