ஸ்ரீமதி இராஜேஸ்வரி சிற்சபேசசர்மா
(இராசு)
பிறப்பு : 12 யூன் 1952 — இறப்பு : 12 யூன் 2018

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில் இளந்தாரி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சிற்சபேசசர்மா அவர்கள் 12-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பஞ்சாட்சரசர்மா, கௌரிஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சாம்பசிவ ஐயர்(காரைநகர்), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிற்சபேசசர்மா(இணுவில்) அவர்களின் பாசமிகு துணைவியும்,

செந்தூரன், சுமித்ரா(சுதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காங்கேயசர்மா, ஜெகதீஸ்வரி, தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தாட்சாயணி, லட்சுமணஜயர், முத்துகுமாரசாமி சர்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சதீஸ்வரசர்மா, அகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹரிநிவாஸ், ஷஷாங்கன், சிவாத்மிகன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செந்தூரன்(மகன்) — இலங்கை
தொலைபேசி:+94212243784
செல்லிடப்பேசி:+94776341676
சதீஸ்வரசர்மா(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447875353802