திருமதி தியாகேஸ்வரி நித்தியானந்தன்
மண்ணில் : 26 சனவரி 1947 — விண்ணில் : 18 மே 2018

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தியாகேஸ்வரி நித்தியானந்தன் அவர்கள் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அரியநாயகம் மகேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற நித்தியானந்தன் அவர்களின் அருமை மனைவியும்,

கீர்த்திகா, சஞ்சுதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஆனந்தநடராஜா, ஆனந்தலட்சுமி, தங்கரத்தினம், நடேசன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சுதாகர், மயூறினி- ரதீஸ்கண்ணா, இந்திரபகவான் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சர்வின் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

சுஜித்தா அவர்களின் அன்புச் சிறிய தாயாரும்,

குருபாலசிங்கம் நிர்மலா, ஜீவமலர், மகேஸ்வரலிங்கம், இராசரத்தினம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஹேமதிவ்வியம், கோபிசன், லோகிசன், ஹேனுசா, டர்னிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 17/9, அம்மன் வீதி
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94775552998
சஞ்சுதன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14389903373
சுஜித்தா(பெறாமகள்) — கனடா
செல்லிடப்பேசி:+14165883715
Loading..
Share/Save/Bookmark