திரு நடராஜா கருணைஆனந்தன்
(ஓய்வுபெற்ற வருமான வரித்திணைக்கள உதவி ஆணையாளர், கணக்காய்வாளர் & வரி ஆலோசகர், நாவலர் நற்பணி மன்றத்தின் ஸ்தாபகர் மற்றும் கொ/ தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர்)
அன்னை மடியில் : 10 பெப்ரவரி 1938 — ஆண்டவன் அடியில் : 16 மே 2018

யாழ். பண்டத்தரிப்பு செட்டியகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா கருணைஆனந்தன் அவர்கள் 16-05-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பண்டிதர் நடராஜா, மங்கயற்கரசி தம்பதிகளின் திருப்புதல்வரும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

திருமகள்(நோர்வே), கலைமகள், சிவமகள், கருணைராஜ்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற புனிதவதியார் அவர்களின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரன்(நோர்வே), உமாகரன்(PanAsia Bank), நிருபா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மித்திரன்(நோர்வே), சாய்கிருஷான், அஸ்வின்(கனடா), திருஷான்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 19-05-2018 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர்  20-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
கருணைராஜ் — கனடா
செல்லிடப்பேசி:+15144738856
கலைமகள் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777393661
உமாகரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94773070313