திரு கந்தையா இரத்தினசிங்கம்
(எழுத்தாளர், கவிஞர், விமர்சகர், ஊடகவியலாளர், அரச விருது - கலாபூஷணம்)
பிறப்பு : 30 யூலை 1940 — இறப்பு : 30 ஏப்ரல் 2018

கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், கணேசபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட கவிஞர் கந்தையா இரத்தினசிங்கம் அவர்கள் 30-04-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ராசபூபதி, விஸ்வநாதன், சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான ராசு, செல்வராசா, இளையதம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், மாவீரர் ஈழன் சிவச்சந்திரன், விஜே ஆனந்தன்(சுவிஸ்), சிவகுமார்(ஜெர்மனி), சிவமலர்(நெதர்லாந்து), சிவனேஸ்வரி(பிரான்ஸ்), சிவராணி(பெல்ஜியம்), சிவஞானசுந்தரம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நல்லினி(இலங்கை), சரஸ்வதி(சுவிஸ்), சுசிலாதேவி(ஜெர்மனி), சாந்தினி(ஜெர்மனி), தேவா(நெதர்லாந்து), சிறிதரன்(பிரான்ஸ்), வில்வராசா(பெல்ஜியம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 01-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தேவா — நெதர்லாந்து
தொலைபேசி:+31180756094
சிவராணி — பெல்ஜியம்
தொலைபேசி:+3214233778
Loading..
Share/Save/Bookmark