திருமதி நாகேஸ்வரி பரமேஸ்வரன்
(ஓய்வுபெற்ற கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்)
இறப்பு : 14 ஏப்ரல் 2018

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி பரமேஸ்வரன் அவர்கள் 14-04-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், ஆறுமுகம் சரஸ்வதி(காரைநகர் களபூமி, சந்திரத்தை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரமேஸ்வரன்(உரிமையாளர்- அம்பாள் களஞ்சியம், வழக்கம்பரை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை(சுப்பிரமணியம்), தவமணிதேவி, இராஜேஸ்வரி(முன்னாள் கிராம உத்தியோகத்தர்- சுழிபுரம் கிழக்கு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற இராமநாதர் குலவீரசிங்கம், கனகரத்தினம்(ஐங்கரன் காட்வெயர்- பண்டத்தரிப்பு), குணசிங்கம், மங்களகுமாரி, காலஞ்சென்ற இரத்தினகுமாரி, நகுலேஸ்வரி(ஆசிரியை- அராலி வடக்கு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புஸ்பவதி, ரஞ்சி(இந்தியா), சிவசுப்பிரமணியம், சற்குணநாதன் ஆகியோரின் அன்புச் சகலியும்,

சுதாகர், தனுஷன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பெரியம்மாவும்,

துர்க்கா, ராம்சீலிகா, சிந்துஜா, பிரிந்தா ஆகியோரின் மாமியும்,

சாரங்கி அவர்களின் சித்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுழிபுரம் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சுழிபுரம் கிழக்கு,
சுழிபுரம்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரன்(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777155324
இராஜேஸ்வரி குலவீரசிங்கம் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61449892066
செல்லத்துரை கண்ணன் — ஜெர்மனி
தொலைபேசி:+4915211877861
Loading..
Share/Save/Bookmark