திரு குட்டியர் பூபாலசிங்கம்
பிறப்பு : 1 யூலை 1940 — இறப்பு : 15 ஏப்ரல் 2018

யாழ். சங்கானை வடக்கு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குட்டியர் பூபாலசிங்கம் அவர்கள் 15-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், குட்டியர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னர் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

வதனா(சுவிஸ்), அனுஷியா(லண்டன்), டசாஜினி(இலங்கை), கஜன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசேந்திரம், தர்மலிங்கம், தங்கமலர், ராணி, கமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சற்குணராசா, இராசலிங்கம், பவானி மற்றும் லங்கேஸ்வரி, ராணி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரமேஸ்(சுவிஸ்), தயாளன்(லண்டன்), ஜெயராஜ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அந்திரியாஸ்(சுவிஸ்), செரினா(சுவிஸ்), யாழினி(லண்டன்), யாழிசன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
டசாஜினி — இலங்கை
செல்லிடப்பேசி:+94755432948
அனுஷியா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447780352651
வதனா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41438187446
கஜன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776017508
Loading..
Share/Save/Bookmark