திருமதி மீனாட்சி சிங்கராஜா
(ஓய்வுபெற்ற ஆசிரியை- புங்குடுதீவு)
தோற்றம் : 29 செப்ரெம்பர் 1929 — மறைவு : 12 மார்ச் 2018

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மீனாட்சி சிங்கராஜா அவர்கள் 12-03-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம்(ஸ்தாபகர்- புங்குடுதீவு மேற்கு பெரியபுலம் பிள்ளையார் கோயில், புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகாவித்தியாலயம்), வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வேலணையைச் சேர்ந்த செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா சிங்கராஜா(இலங்கை புகையிரத திணைக்கள கட்டிட மேற்பார்வையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயராஜா(லண்டன்), ஜீவராஜா(லண்டன்), அருள்ராஜா(லண்டன்), சுபராஜா(மத்திய பதிவேட்டு அறை பதிவாளர் திணைக்களம்- மாளிகாவத்தை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(அத்தியட்சகர் பால்சபை- யாழ்ப்பாணம்), சிவகாமிப்பிள்ளை(சிங்கப்பூர்), சோமஸ்கந்தன்(தபாலதிபர்- புங்குடுதீவு), சிவயோகம்மா, நடராசா(தலைமைக் கூட்டுறவு பரிசோதகர்- யாழ்ப்பாணம்), மங்கையற்கரசி மற்றும் கனகரட்ணம்(ஓய்வுபெற்ற வைத்திய கலாநிதி, வத்தேகம), பர்வதபத்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகநாதன்(உரிமையாளார்- ஹரன் ஸ்ரூடியோ, ஹரன் தியேட்டர்), பாலசிங்கம்(பிரபல வர்த்தகர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கௌசலா(கௌரி- லண்டன்), சாந்திமாலா(லண்டன்), சுமித்திரா(லண்டன்), உமையாள்(இந்து சமய கலாச்சார அலுவலர் திணைக்களம்- கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அமுதகௌரி, பொன்னம்பலம்(கட்டிட திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர்- சிங்கப்பூர்), முருகேசு(உடையார்- புங்குடுதீவு), நமசிவாயம்(திடீர் மரண விசாரணை அதிகாரி- புங்குடுதீவு) மற்றும் தடாதகைப்பிராட்டி(ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியை- வத்தேகம), காலஞ்சென்ற சிந்துராஜா(பிரபல வர்த்தகர்- கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு(பொலிஸ் உத்தியோகத்தர்- யாழ்ப்பாணம்), மங்கையற்கரசி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை(பிரபல வர்த்தகர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புச் சகலியும்,

மகாலட்சுமி(வேலணை) அவர்களின் அன்புச் சகலியும்,

கீர்த்தனா(லண்டன்), சஞ்ஜீவன்(லண்டன்), அபிஷா(லண்டன்), கிருஷா(லண்டன்), விஷ்ணுகாந், ஹரிஷ்பவன், லோசனா(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 14-03-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயராஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447931095928
ஜீவராஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447878895085
அருள்ராஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447824878549
சுபராஜா — இலங்கை
செல்லிடப்பேசி:+94755244050
Loading..
Share/Save/Bookmark