மட்டக்களப்பு தேற்றாத்தீவைப் பிறப்பிடமாகவும், திருப்பழுகாமத்தை வசிப்பிடமாகவும், மட்டக்களப்பு உப்போடை வீதியை வதிவிடமாகவும் கொண்ட தம்பாப்பிள்ளை இராசையா அவர்கள் 12-03-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை சந்தனப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மாணிக்கம், வைரமுத்து, சின்னத்தம்பி, கண்ணம்மை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குணரெத்தினம்(ஆசிரியர்), சூரியகுமார்(லண்டன்), கோகுலதாசன்(ஆசிரியர்), ரஞ்சினி(லண்டன்), மனோகரி(லண்டன்), சிவாஜினி(லண்டன்), தர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. பிரதீபன், சகான், அபிராம், சிந்தியா, ஹரிசயன் ஆகியோரின் அம்மப்பாவும்,
மஹிஷா, சோபி, ஜோதிக், தனுஷன், தரனியா, சுடிக்ஷா, பிரித்தன், தாரகன், சொருஜன் ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.