திருமதி சரோஜா ஈஸ்வரதாசன்
இறப்பு : 11 பெப்ரவரி 2018

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், திருநெல்வேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரோஜா ஈஸ்வரதாசன் அவர்கள் 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னத்தங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பவானி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஈஸ்வரதாசன்(இளைப்பாறிய காணிப்பதிவாளர், மேலதிக மாவட்டப் பதிவாளர், யாழ். மாவட்டம் அகில இலங்கை சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரேவதி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதி மாகாண விவசாயத்திணைக்களம், திருநெல்வேலி), மயூரன்(அபிவிருத்தி உதவியாளர்- யாழ். போதனா வைத்தியசாலை), கலைமதி(ஆசிரியை- சபாபதி வித்தியாலயம், லண்டன்), வானதி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முத்ரூபன்(மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், நல்லூர்), சர்மிளா(சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம், யாழ்ப்பாணம்), மகிபன்(Field Engineer- British Telecoms- லண்டன்), சுபீகரன்(ஆசிரியர்- யாழ். மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாந்தி(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

பாலகுமாரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற அமிர்தலிங்கம்(முன்னாள் உதவி தொழில் ஆணையாளர்- கொழும்பு), சண்முகநாதன்(சண் அங்கிள்), மகேஸ்வரி(ஓய்வுபெற்ற தாதிய உத்தியோகத்தர்- யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுவாதிகா, சர்வின், கர்சிகா, கரிஷ், அக்‌ஷரா(லண்டன்), கிருத்திக்(லண்டன்), பிரவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 180/2, சேர் பொன் இராமநாதன் வீதி
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94212221167
செல்லிடப்பேசி:+94773583763
Loading..
Share/Save/Bookmark