திருமதி கமலாதேவி மார்க்கண்டு
அன்னை மடியில் : 29 ஓகஸ்ட் 1931 — ஆண்டவன் அடியில் : 10 பெப்ரவரி 2018

யாழ். சுன்னாகம் வரியபுலத்தைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி மார்க்கண்டு அவர்கள் 10-02-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நிவேதா(லண்டன்), சுதர்சனன்(லண்டன்), சிறிகாந்தன்(இலங்கை), சுரேஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தவமணி, ரத்தினபூபதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவஞானறட்ணநாதன், மாலினி, லோகாம்பிகை, கெளரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹரிஸ், சந்தோஸ், லவன், சங்கீத், சயன், லக்மிதா, மிதுஷனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சிவா
தொடர்புகளுக்கு
சிவா — பிரித்தானியா
தொலைபேசி:+442084293534
Loading..
Share/Save/Bookmark