திரு செல்லத்துரை சிவஞானசுந்தரம்
பிறப்பு : 24 சனவரி 1940 — இறப்பு : 8 பெப்ரவரி 2018

யாழ். தும்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிவஞானசுந்தரம் அவர்கள் 08-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அழகம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யசோதா அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகரன்(லண்டன்), சிந்துஜா(அவுஸ்திரேலியா), ஷகிலா(லண்டன்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

சரஸ்வதி, சகுந்தலா, மனோகரா, சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லொறேன், கிருபன், மக்ஸ்வெல், ரஜனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சனாதனன், ஆகாஷ், கெளதம், சாதனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 10-02-2018 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணிதொடக்கம் பி.ப 05:00 மணிவரையும், 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிதொடக்கம் மு.ப 11:00 மணிவரையும் பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 12:30 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Sivagnanasundaram Selvadurai was born in Thumpalai, Jaffna and lived in Wellawatta, Colombo. He passed away peacefully on February 08, 2018 in Colombo, Sri Lanka.

Beloved Son of late Selvadurai and Alagammah, Son-in-law of late Rajaratnam and Sivayogam.

Beloved Husband of Yasothara.

Loving Father of Suthaharan(UK), Sinthuja(Australia) and Shakila(UK).

Caring Father-in-law of Lorraine, Kirupan, Maxwell and Rajani.

Loving Grand father of Sanathanan, Akash, Gautham and Saathana.

Brother of Saraswathi, Sakunthala, Manohara, and Chandra.

Remains lie at Borella Jayaratna Funeral Parlour for viewing on Saturday, February 10, 2018 from 03:00 PM to 05:00 PM and on Sunday, February 11, 2018 from 09:00 AM to 11:00 AM Cortege leaves the Parlour after service at 12:30 PM on Sunday, February 11, 2018 for the cremation at General Cemetery Borella.

This notice is provided for Family and Friends.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யசோதா — இலங்கை
செல்லிடப்பேசி:+94774135431
ரவீந்திரகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777369184
சூரியகுமாரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94778941402
Loading..
Share/Save/Bookmark