திரு துரைராஜா ஸ்கந்தகுமார்
(முன்னாள் காணி திருத்த ஆணைக்குழு இயக்குனர்)
பிறப்பு : 15 மே 1945 — இறப்பு : 13 சனவரி 2018

யாழ். ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், Melbourne Australia வை வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா ஸ்கந்தகுமார் அவர்கள் 13-01-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜா(முன்னாள் யாழ் நகர முதல்வர்) நாகேஷ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவதாசன் பவானி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நந்தினி(ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர் யாழ் கிளை) அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கோ, சரண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லெஸ்னி அவர்களின் அன்பு மாமனாரும்,

இராஜநாயகி சர்வலோகநாயகம், காலஞ்சென்ற இராஜகுமாரி கதிர்காமநாதன், இராஜசுந்தரி சபாரட்னம், காலஞ்சென்றவர்களான ஜெயகுமார், இராஜமனோகரி புலேந்திரன், சாந்திகுமார் மற்றும் நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:30 மணிமுதல் பி.ப 03:30 மணிவரை Stratus Chapel Bunurong Memorial Park, 790 Frankston- Dandenong Rd, Dandenong South Victoria 3175, Australia வில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தகுமார்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி:+16477864796
- — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61398863629
Loading..
Share/Save/Bookmark