யாழ். ஏழாலை மத்தி காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் சுந்தரலிங்கம் அவர்கள் 11-01-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம்(இராசமணி) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தீபா(பிரான்ஸ்), காண்டீபன்(கண்ணன்- பிரான்ஸ்), சர்மிளா(மதி- இத்தாலி), லமிரா(லமி- இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கந்தசாமி, விமலாதேவி(இலங்கை), தேவதாசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மகிந்தன்(பிரான்ஸ்), சத்தியரூபன்(இத்தாலி), றஜிதா(பிரான்ஸ்), றாஜீவ்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கதிரவேலு, காலஞ்சென்ற காசிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
தங்கவடிவேல், லோகேந்திரம், சறோஜாதேவி, சிறீமகாராணி, காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனனி, அபிசா, ஆயிசா(பிரான்ஸ்), அகிசன், லகிசன்(இத்தாலி), ஈசா(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2018 திங்கட்கிழமை அன்று மதியம் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.