திரு கந்தப்பு சிவனேசன்
(இளைப்பாறிய உத்தியோகத்தர்- லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனம்)
பிறப்பு : 25 ஒக்ரோபர் 1951 — இறப்பு : 7 சனவரி 2018

யாழ். காரைநகர் மாம்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பத்தர்கேணியடியை வதிவிடமாகவும் கொண்ட கந்தப்பு சிவனேசன் அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு, புவனேஸ்வரி தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற M.A கந்தையா, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- பொருளாதார அபிவிருத்தி அமைச்சு) அவர்களின் அன்புக் கணவரும்,

விமலராணி, ஜெயராணி, சிறீராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இராமநாதன், தர்மபாலன், மகிந்த அத்துக்கொறள, தெய்வநாயகி, Dr. தேவகுஞ்சரி, புவனேஸ்வரி, அன்னலக்‌ஷ்மி, பங்கயற்செல்வி, செந்தில்நாதன், காலஞ்சென்ற தெய்வேந்திரன், தெட்சணாமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், தியாகராஜநாதன் மற்றும் வீரசிங்கம், உருத்திரன், கிருஷ்ணகுமாரி, சாந்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சுதர்சினி, சுபாஷினி, சுகந்தன், யுவராஜ், லக்‌ஷ்மண், ரவீந்திரா, குகன், காயத்திரி, ஹரி ஆகியோரின் அன்பு மாமாவும்,

சேந்தன், மயூரன், அம்பிகை, அமலன், லக்‌ஷ்மி, கிருஷ்ணா, ஐங்கரன், கேசவன், கலைமகள், செந்தூரன், அபிராமி, தேவகி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் காரைநகர் பத்தர் கேணியடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கமலாம்பிகை சிவனேசன்(மனைவி)
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94212252213
செல்லிடப்பேசி:+94714500069