யாழ். கோப்பாய் தெற்கு கும்பப்பிள்ளையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் தில்லைநாதலிங்கம் அவர்கள் 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் திருஞானபூங்கோதை தம்பதிகளின் இளைய மகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அம்பலவாணன், தேன்மலர், சிவஜோதி, வனஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசையா(நல்லூர்), கனகசபை(கோப்பாய்), இரத்தினம்(கோப்பாய்) மற்றும் திருவிளங்கம்(லண்டன்), காலஞ்சென்ற நெல்லிநாதலிங்கம்(கோப்பாய்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்ஜினி, கணநாதன், பவானி, நந்தரகு ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
டினோஜா, ரெகான், மிரேன், மிதுன், கிருத்திகன், சஸ்வின், சுஜந், ஷாதுர்ஜா, சோபிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |