திருமதி சுப்பிரமணியம் சாந்தினி
தோற்றம் : 2 யூலை 1960 — மறைவு : 2 டிசெம்பர் 2017

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சாந்தினி அவர்கள் 02-12-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற துஷ்யந்தன், துவாரகி(துர்க்கா), துஷ்யந்தினி(கௌரி), நந்தினி(சந்திரா), நதியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பராசக்தி, காலஞ்சென்ற தவேந்திரன், சிவா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயகுமார், குணசீலன், சுரேந்திரன், யசிந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அமுதமலர் அவர்களின் அன்பு மைத்துனியும்,

அணுசிகன், அபிஷா ஆகியோரின் அன்பு அத்தையும்,

லக்சி, அணுஷ்டன், பிறின்சன், பபின்சன், கவிஷ், லிபிஷா, ரெரன்ஷியா, அஸ்வின், வரிஸ், கரிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
உத்தமன் சிலையடி,
ஏழாலை மேற்கு,
ஏழாலை,
யாழ்ப்பாணம்.

தகவல்
சிவா(தம்பி), தங்கை(பராசக்தி), பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சிவா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41797664555
பராசக்தி — இலங்கை
செல்லிடப்பேசி:+94768962364
கௌரி — கனடா
தொலைபேசி:+19059100374
சுரேன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94772250354
நதியா — இந்தியா
செல்லிடப்பேசி:+919597907405
Loading..
Share/Save/Bookmark