திரு தாமோதரம்பிள்ளை தர்மகுலசிங்கம்
(குலம்)
பிறப்பு : 10 ஒக்ரோபர் 1951 — இறப்பு : 11 நவம்பர் 2017

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மண்கும்பானை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை தர்மகுலசிங்கம் அவர்கள் 11-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தாமோதரம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீவரட்ணம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜி, ரம்யா, கயன்(லண்டன்), வித்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தேவராஜா, நித்தியம், ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுந்தர், சசிகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்தானலட்சுமி, சந்திரா, காலஞ்சென்ற சிவலோகநாதன், விஷ்ணு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்சியா, அபிசயா, அதிசயா, ஆகசியா, லக்சியா, மதுசியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-11-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி:+94770402658
கயன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447585801599
ராசா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447472327097
Loading..
Share/Save/Bookmark