யாழ். பருத்தித்துறை வீதி 3ம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் கனகரத்தினம் அவர்கள் 11-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு பூமணி தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும், காலஞ்சென்ற மாணிக்கம், முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்கினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜேந்திரன்(நோர்வே), றஜேந்திரன்(நோர்வே), கஜேந்தினி(யாழ். மாநகரசபை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பூவிலிங்கம், செல்வராசா, மகாலட்சுமி, நவமணி(பம்பா), கனகசுந்தரம்(ACDC), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், குமரேசன், பாலச்சந்திரன், காலஞ்சென்ற சண்முகராசா, வவா, றோசா, மல்லி, பவானி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விஜிதா(நோர்வே), நிஷா(நோர்வே), முருகநாகராஜா(லக்ஸ்சி பஸ் உரிமையாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராணி, கமலா(ஜெர்மனி), பரமேஸ்வரி, தேவன்(டென்மார்க்), காலஞ்சென்றவர்களான சாமி, தரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றிச்சாட், கெவின், லியானா, ஹரிஷாத், லக்சனா, றம்மியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-11-2017 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: பருத்தித்துறை வீதி, 3ம் ஒழுங்கை, யாழ்ப்பாணம். |