திருமதி பூமணிதேவி இராஜலிங்கம்
பிறப்பு : 20 ஓகஸ்ட் 1948 — இறப்பு : 13 நவம்பர் 2017

யாழ். கரணவாய் கிழக்கு கரவெட்டி உச்சில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்ட பூமணிதேவி இராஜலிங்கம்(மணி அக்கா) அவர்கள் 13-11-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜலிங்கம்(தோரைத்தம்பி) அவர்களின் ஆசை மனைவியும், இராஜசிறீ(சுவிஸ்), பத்மசிறீ(லண்டன்), உதயசிறீ(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பதீஸ்வரி கருணாநிதி(கனடா) அவர்களின் பாசமிகு சகோதரியும்,

மாலினி, விஜயா, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கர்ணன்(கனடா), வாணன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,

கீர்த்தனா, வரன், அங்கவி, ஆதவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அதிசயன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை KNK Stadium Sports Bar,Imperial Fields,Morden SM4 6BF இல் இறுதிக்கிரியை நடைபெற்று, அதனைத்தொடர்ந்து அஞ்சலி நிகழ்வும் நடைபெறும். பூதவுடல் தகனக்கிரிகைக்காக North East Surrey Crematorium, Cemetery Lodge,Lower Morden Lane,Morden Sm4 4NU க்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு  மதியம் 12:00  - 01:00 பி.ப அளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பத்மசிறீ(மகன்)
தொடர்புகளுக்கு
பத்மசிறீ(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+442082864355
செல்லிடப்பேசி:+447939456143
Loading..
Share/Save/Bookmark