திரு செல்வராசா மகேஸ்வரன்
(ரவி- பிரியா கொமினிகேஷன், ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு)
மலர்வு : 12 சனவரி 1982 — உதிர்வு : 11 நவம்பர் 2017

யாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா மகேஸ்வரன் அவர்கள் 11-11-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், தர்மலிங்கம் கமலா தம்பதிகள், வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

செல்வராசா பாலாமணி தம்பதிகளின் மூத்த மகனும், தம்பிராசா அகிலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலைச்செல்வி(கலா ஸ்ரோர்ஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெனகன், தரணிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சியாமளா(லண்டன்), சிவரூபி(கனடா), சிவப்பிரியா(கனடா), பிரசாந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயானந்தராஜன்(லண்டன்), சஞ்ஜீவன்(கனடா), பத்மலோஜன்(கனடா), லக்சிகா(லண்டன்), மோகனதாஸ்(மயூரன் ஸ்ரோரஸ்), விமலதாஸ்(கலா ஃபூட்சிற்றி), சண்முகதாஸ்(பிரான்ஸ்), பரிமளாதேவி(திருநெல்வேலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தக்சன், தஷ்வினி, கைலாஷ், கார்த்திகா, கீர்த்தீஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாணுகா அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 273/1,
பிள்ளையார் கோவில் வீதி,
உக்குளாங்குளம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94775969394
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94750891391