திருமதி வாமதேவன் பிறேமகுமாரி
இறப்பு : 11 நவம்பர் 2017

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை அராலி மத்தியை வதிவிடமாகவும் கொண்ட வாமதேவன் பிறேமகுமாரி அவர்கள் 11-11-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜசிங்கம் கனகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரைசாமி அம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வாமதேவன்(சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,

லிங்கேஷன்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), அகிலேஷன்(ஆசிரியர்- யாழ். திருக்குடும்பக் கன்னியர் மடம்), கீர்த்தனா(உத்தியோகத்தர்- இந்திய விசா அலுவலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சங்கீதா அவர்களின் அன்பு மாமியாரும்,

ஜெயகாந்தகுமார்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

மனோகுமாரி(கனடா) அவர்களின் அன்பு மைத்துனியும்,

கிஷன், சோபிதா(கனடா) ஆகியோரின் அன்பு அத்தையும்,

கணஷியாம் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி பூனாவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94778057745
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94779370208
- — இலங்கை
தொலைபேசி:+94212256869
Loading..
Share/Save/Bookmark