திரு வல்லிபுரம் சிவசுப்பிரமணியம்
(ஓய்வுபெற்ற உணவுக்கட்டுப்பாட்டு திணைக்கள உத்தியோகத்தர்- Food Control Department- கொழும்பு, கோப்பாய், அநுராதபுரம், பருத்தித்துறை)
பிறப்பு : 24 ஏப்ரல் 1924 — இறப்பு : 10 நவம்பர் 2017

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், புலோலி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு தெகிவளையை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், தங்கமுத்து தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை(புலோலி தெற்கு), அங்கயற்கண்ணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிரஞ்சலா(கொழும்பு), நிர்மலா(ஐக்கிய அமெரிக்கா), சசிகலா(லண்டன்), சுசிலா(லண்டன்), கெளசல்யா(லண்டன்), உதயகுமாரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிதம்பரநாதன், சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஈஸ்வரன்(வவுனியா), அம்பலவாணர்(ஐக்கிய அமெரிக்கா), அழகராஜா(லண்டன்), ஜெயசீலன்(லண்டன்), நித்தியபாஸ்கரன்(லண்டன்), ஷாமினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேஸ்வரி, ஈஸ்வரி, செல்லக்கன்னி(லண்டன்), பரமேஸ்வரி(நியூசிலாந்து), மங்கையற்கரசி(கொழும்பு), காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சரவணமுத்து, மற்றும் சத்தியநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதுரா(கொழும்பு), ஹரன், அஞ்சலி(ஐக்கிய அமெரிக்கா), ஜனகன்(லண்டன்), மிருனாலினி(லண்டன்), வைஷ்ணவி, அஸ்வினி(லண்டன்), கோகுலன், ராகுலன், பாகுலன்(லண்டன்), அபிஷேக்(லண்டன்) ஆகியோரின் ஆருயிர் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 15-11-2017 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியை பி.ப 03:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No.6, Cambell Place,
Dehiwala,
Colombo.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94112732652
Loading..
Share/Save/Bookmark