திருமதி கணேசலிங்கம் அம்பிகை
(தங்கம்)
பிறப்பு : 28 மார்ச் 1944 — இறப்பு : 8 செப்ரெம்பர் 2017

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் அம்பிகை அவர்கள் 08-09-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நாரந்தனை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைரமுத்து இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், சரவணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணேசலிங்கம்(ஓய்வுநிலை அதிபர்- யாழ். வேலணை மத்திய கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

உமையாள், கலைவாணி, சரவணன், சிவகாமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற துரைசிங்கம் தர்மநாயகி மற்றும் பரஞ்சோதி இந்திரா, சபாநாதன் ஈஸ்வரி, ராதாதேவி இராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குலதீபன், சதீஸ்கரன், அனுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வள்ளிநாயகி திருநாவுக்கரசு, குறிஞ்சிவேந்தன் சாந்தி, பகீரதி கந்தப்பிள்ளை, மகாதேவன் திருமணச்செல்வி, சுந்தரமூர்த்தி வசந்தா, புஷ்பராணி கணேசமூர்த்தி, செவ்வேள் வளர்மதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தானியா, அனீரா, சமரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 06.00 மணிக்கு கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
32, 4/6, மாதங்கவத்த லேன்,
வெள்ளவத்தை,
கொழும்பு - 06.

தகவல்
கணேசலிங்கம்(கணவர்), குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94112367217
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94775805500
Loading..
Share/Save/Bookmark