திரு கோணேசபிள்ளை இராசலிங்கம்
(ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ்/வேலணை மத்திய மகா வித்தியாலயம்)
தோற்றம் : 25 டிசெம்பர் 1936 — மறைவு : 12 ஓகஸ்ட் 2017
வானொலி அறிவித்தல்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சுருவில், கொக்குவில் அச்சுக்கூட வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ  தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கோணேசபிள்ளை இராசலிங்கம் அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோணேசபிள்ளை(அக்குராசி- பிரபல வர்த்தகர்) ஆச்சிமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான துரையப்பா விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பரமேஸ்வரி(கிளி- ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியை- பெரியபுலம் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பவான், வித்தகன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சோமாவதி, சிவபாதசுந்தரம் மற்றும் வேதவதி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜானுகா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அன்னலட்சுமி மற்றும்  அழகேஸ்வரி, காலஞ்சென்ற தர்மலட்சுமி(திரு), பூபாலசிங்கம், காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, பத்மாசினி, இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, கந்தவேல், கந்தசாமி மற்றும் சூரியகுமார், கரோலின், சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,

மிருதி அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 07:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Saint Cyprian Hay Mills, 7 Fordrough, Birmingham B25 8DL, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 10:00 மு.ப
முகவரி:Birmingham Crematorium, 389 Walsall Rd, Birmingham B42 2LR, UK
தொடர்புகளுக்கு
பிரித்தானியா
தொலைபேசி:+441212448629
செல்லிடப்பேசி:+447930868908
Loading..
Share/Save/Bookmark