திரு தர்மலிங்கம் இராஜரட்ணம்
(ஓய்வு நிலைப் பணிப்பாளர்- உயர் தொழிநுட்பவியல் நிறுவனம், யாழ்ப்பாணம்)
பிறப்பு : 17 செப்ரெம்பர் 1945 — இறப்பு : 16 மே 2017

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் இராஜரட்ணம் அவர்கள் 16-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சித்ரா(ஓய்வு நிலை பிரதி அதிபர்- யாழ். திருக்குடும்பக் கன்னியர் மடம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

நர்மதா(தேசிய சேமிப்பு வங்கி), Dr. சுரனுதா(Add. M.O.H குண்டசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரதீபன்(தேசிய சேமிப்பு வங்கி தலைமையகம்), Dr. A. சுதாகரன்(தேசிய வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இலட்சுமிப்பிள்ளை(கனடா), காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகம்மா, பூபதி, மற்றும் இராமச்சந்திரா(ஓய்வு நிலை விவசாய பண்ணை முகாமையாளர்), திலகம் பாலகுமாரன்(ஓய்வு நிலை ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியபாலன்(கனடா), இளங்கனி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆதிரா, ஆதிரன், ஆத்மயன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 18-05-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94212226803
Loading..
Share/Save/Bookmark