திரு சிவஸ்ரீ சுவாமிநாத பாலசுந்தர குருக்கள்
(பாலாமணி குருக்கள்- நயினை நாகபூசணி அம்பாள் ஆலய ஆதின பரம்பரை குருக்கள்)
இறப்பு : 17 டிசெம்பர் 2014
வானொலி அறிவித்தல்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், யாழ். நீராவியடியை வதிவிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ சுவாமிநாத பாலசுந்தர குருக்கள் அவர்கள் 17-12-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாத குருக்கள் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்க குருக்கள்(முன்னாள் பருத்தித்துறை கோட்டுவாசல் அம்பாள் ஆலய பிரதமகுரு) சாரதாஅம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியதர்ஷினி, பாலகணேஸ்வர குருக்கள், சிவாஜினி மனுவித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சூளிகாம்பாள், லலிதாம்பிகை, சிவஸ்ரீ சுவாமிநாத பரமேஸ்வர குருக்கள், மற்றும் பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துளசிகாந்த குருக்கள், அபர்ணா, பிரகதீஸ்வரசர்மா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திவ்யன், நிதர்சன், வர்ஷினி, வித்யாசாகர், திவ்வியாசாகர், நீதேஷ்சாகர், சௌம்யா, ரித்திக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2014 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலகணேஸ்வர குருக்கள் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777371255
பிரியதர்ஷினி — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+496934829783
மனுவித்யா — பிரித்தானியா
தொலைபேசி:+441216802367