திரு பொன்னையா நித்தியானந்தன்
தோற்றம் : 11 ஓகஸ்ட் 1937 — மறைவு : 3 நவம்பர் 2014

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா நித்தியானந்தன் அவர்கள் 03-11-2014 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, செல்லமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனபாக்கியம்(ஓய்வு பெற்ற ஆசிரியை விவேகானந்தா மகாவித்தியாலயம் கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும்,

ரவிச்சந்திரன், நிலமலச்சந்திரன்(முகாமையாளர் ஹற்றன் நசனல் வங்கி முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நாகம்மா, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, அன்னபூரணம், மற்றும் சரஸ்வதி(கனடா), இளையதம்பி(அம்பாள் ஹாட்வெயர்), லெட்சுமி(ஓய்வு பெற்ற ஆசிரியை யா/திருக்குடும்பகன்னியர் மடம்), இராசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2014 புதன்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சகோதரர்கள்
தொடர்புகளுக்கு
நிமலன்(மகன்) — இலங்கை
தொலைபேசி:+94112360586
செல்லிடப்பேசி:+94714933272