திரு சின்னக்குட்டி சிதம்பரநாதன்
(இளைப்பாறிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், குற்றப் புலனாய்வுத்துறை)
தோற்றம் : 9 ஏப்ரல் 1938 — மறைவு : 25 ஒக்ரோபர் 2014
வானொலி அறிவித்தல்

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சின்னக்குட்டி சிதம்பரநாதன் அவர்கள் 25-10-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான தம்பையா மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

அன்னபூரணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீரங்கன், இராகுலன், கோகுலன், தவகுலன், குருகுலன், காலஞ்சென்ற தனுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கணேசன், கதிர்காமலிங்கம், பார்வதி, மற்றும் தில்லைநாயகி, மீனாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜன்சி, தயாநிதி, சத்தியா, ராதிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான குகதாசன், இலங்கைநாதன், மற்றும் இராசேஸ்வரி, கனகரெத்தினம், பவானியம்மா, ஞானசவுந்தரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி, சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகலரும்,

நர்த்தகி, தாரகி, விகாஷ், கிரிஷ், ஆசிகா, பிர்த்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-10-2014 திங்கட்கிழமை அன்று காலை 09:00  மணிக்கு பொறளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 01:00 மணிக்கு கிரியை நடைபெற்று பின்னர் 03:00 மணியளவில் பொறளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
12B, 1/1, 46 வது ஒழுங்கை,
வெள்ளவத்தை.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
-- — இலங்கை
தொலைபேசி:+94112363954
செல்லிடப்பேசி:+94773561262
Loading..
Share/Save/Bookmark