திருமதி கனகம்மா மாணிக்கம்
(அடைவுகடை- நயினாதீவு)
தோற்றம் : 9 ஏப்ரல் 1932 — மறைவு : 23 மே 2014
வானொலி அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா மாணிக்கம் அவர்கள் 23-05-2014 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னாச்சிப்பிள்ளை அவர்களின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

இலங்காதேவி(கனடா), சியாமளாதேவி, இராசேந்திரன்(பூபாலசிங்கம் புத்தகசாலை), நாகேஸ்வரி, வடிவழகு(லண்டன்), கமலவேணி(கனடா), சுரேந்திரன்(சுதா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, சின்னம்மா, சிவயோகம், சண்முகநாதன், கோபாலபிள்ளை, மற்றும் பாலகிருஷ்ணன், நாகமுத்து, அருணாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வராசா(கனடா), இராமலிங்கம், வசந்தா(சைவமங்கையர் வித்தியாலயம்), ஸ்ரீதரசிங்(பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர்), அமுதலிங்கம்(லண்டன்), ஸ்ரீமுருகதாசன்(கனடா), சதிகலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, கந்தையா, சங்கரப்பிள்ளை, இராமலிங்கம், மற்றும் தங்கம்மா, பாக்கியம் ஆகியோரின் மைத்துனியும்,

மாதுனி, சந்திரகுமார்(ஐக்கிய அமெரிக்கா), யாதவன், ஜனார்த்தனன், ஜனனி, நரேந்திரன்(கனடா), சுஜிவா, ராஜரூபன்(பிரான்ஸ்), சித்திரா, குகதாசன், சுரேகா, கேதீஸ்வரன்(இந்தியா), சிந்துஜா, விதுஷ்ஷனா, சாரங்கன், ஹருண்யா, பாணு, பிரணவா, சர்விகா, நர்த்தனன், அர்ச்சனன், மகிமா, சகிமா, சுகிமா, நிஷாந் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

மகிலன், சாயகன், பவிஷ், ராகுல்ராஜ், சுமித்திரா, கஹினா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:30 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-
ஸ்ரீதரசிங்,
பூபாலசிங்கம் புத்தகசாலை,
இல 20, விவேகானந்தா வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு-06

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
_ — இலங்கை
தொலைபேசி:+94112586496
_ — கனடா
செல்லிடப்பேசி:+14169924474
_ — பிரித்தானியா
தொலைபேசி:+442089429157