திருமதி தம்பு நகுலாம்பிகை
(ஓய்வுபெற்ற ஆசிரியை மகாஜன கல்லூரி- தெல்லிப்பழை)
பிறப்பு : 31 மார்ச் 1924 — இறப்பு : 6 பெப்ரவரி 2014

யாழ். தெல்லிப்பழை விளிசிட்டியைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு நகுலாம்பிகை அவர்கள் 06-02-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சேதுப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற சோமுப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற தம்பு(கச்சேரி, முல்லைத்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

விஜிதா(ஆசிரியை- வித்தியானந்தா கல்லூரி, முள்ளியவளை), விஜயா(ஜெர்மனி), ஜெயந்தி(கனடா), ஸ்ரீகாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரஸ்வதி(இலங்கை), இராசலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை- கனடா), தட்சணாமூர்த்தி(ஓய்வுபெற்ற அதிபர்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வரட்ணம்(கணக்காளர்- இலங்கை), சுரேஸ்குமார்(ஜெர்மனி), கணேசலிங்கம்(கனடா), சுகந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ஏரம்பு(இலங்கை), சற்குணம்(கனடா), செல்வமணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வித்தியாயினி, சத்தியாயினி, அஜந், ஆஞ்சனா, றெஜினா, றதிஷ், கிருஷ்சாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2014 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முள்ளியவளை நாவற்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜிதா — இலங்கை
தொலைபேசி:+94212061106
விஜயா — ஜெர்மனி
தொலைபேசி:+494131990645
ஜெயந்தி — கனடா
செல்லிடப்பேசி:+14162994557
ஸ்ரீகாந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33134643541